இணையத்தில் வேகமாக உலவ உதவும் பயர்பாக்ஸ் நீட்சி
இணையத்தில் அதிகமாக உலவுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஃபயர்பாக்ஸ் நீட்சி இது. (Firefox Browser add-on). www.aroospc.blogspot.com
எனக்கு மிகவும் பிடித்த பயன்பாடு - முடிவில்லா பக்கம் ("Endless Page"). நீங்கள் ஒரு வலைப்பூவைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், முதல் பக்கம் படித்து முடிக்கும் முன், தானாகவே அடுத்த பக்கத்தைத் தரவிறக்கி வைத்திருக்கும். அதே போல், Google, yahoo போன்ற தேடுப்பொறிகளில் தேடிடும் பொழுதும், தானாகவே அடுத்தடுத்த பக்கங்களைத் தரவிறக்கம் செய்து தயாராக வைத்திருக்கும்
இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்திட, https://addons.mozilla.org/en-US/firefox/addon/9825
“Related Article” - சில நேரங்களில், நாம் இணைய பக்கங்களில் புதிய தகவல்களைப் படித்திடும் போது, அதைப் பற்றி மேலும் அறிய, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள விளைவோம். அதை எளிதாக்குகிறது, இந்த நீட்சி. ஒரு வார்த்தையைத் தெரிவு (select) செய்த உடன், அதன் மேல், ஒரு பலூன் (Popup Ballon) தோன்றும், அதில் “Google Search", "Wikipedia Search", "Twitter Search" போன்ற அம்சங்கள் இருக்கும்.
மேலும், வார்த்தைகளைத் தெரிவு செய்தவுடன், தானாகவே “Copy" ஆகிவிடும். (காப்பி & பேஸ்ட் பதிவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.)
மேலும், Googleலில் தேடிடும் பொழுதும், தேடும் சொல்லிற்குச் சம்பந்தப்பட்ட நிறைய பக்கங்களை ”Amazon, Twitter" போன்ற இணைய தளங்களில் இருந்து, எடுத்துத் தருகிறது.
“Awesome Toolbar” - இந்த வசதி, Google Chrome-ல் இருப்பது போல, நாம் Address bar-ல் type செய்ய ஆரம்பித்தவுடன், நாம் அடிக்கடி செல்லும் தளங்களைப் பட்டியலிடும்.
Ctrl + Space - தட்டினால் Quick launcher என்ற வசதி வருகிறது.அதிகம் பயன்படுத்தும் தளங்களை அதில் பட்டியலிட்டுக் கொண்டால், Cellphone-ல் Quick dial வசதி இருப்பது போல, ஒரே சொடுக்கில் நமக்கு விருப்பமான தளத்திற்குச் செல்லலாம்.
நாம் பார்வையிடும் இணைய தள பக்கத்தில் உள்ள எல்லா சுட்டிகளையும், எல்லா படங்களையும் ஒரே சொடுக்கில் தரவிறக்கம் செய்யும் வசதியும் இதில் உள்ளது.
இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்ய, இங்கே செல்லவும்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/9825
ஜிமெயில், "Undo Send" என்ற ஒரு புதிய வசதியை அளிக்கிறது. அதாவது, நீங்கள் தவறுதலாக அனுப்பிய மெயிலை, மெயில் பெறுபவர் இன்பாக்ஸிக்குச் செல்லாமலேயே தடுத்திடலாம்.
மெயில் "Compose" செய்து, மின்னஞ்சலை அனுப்பிய பிறகு, Mail Send Successfully என்ற செய்தி வரும். நீங்கள் இந்த வசதியை activate செய்திருந்தால், மின்னஞ்சல், அனுப்பிய பிறகு, "Your Message has been send, Undo" என்ற இணைப்பு வரும். மின்னஞ்சல் திரும்பப் பெறுவதாயின், இந்த இணைப்பைச் சொடுக்கினால் போதும்.
மெயில் "Compose" செய்து, மின்னஞ்சலை அனுப்பிய பிறகு, Mail Send Successfully என்ற செய்தி வரும். நீங்கள் இந்த வசதியை activate செய்திருந்தால், மின்னஞ்சல், அனுப்பிய பிறகு, "Your Message has been send, Undo" என்ற இணைப்பு வரும். மின்னஞ்சல் திரும்பப் பெறுவதாயின், இந்த இணைப்பைச் சொடுக்கினால் போதும்.
இந்த சேவையை பயன்படுத்த, ஜிமெயிலில் உள்நுழைந்து, "Labs" பக்கத்திற்குச் சென்று, "Undo Send" சேவையைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்தவும். (ஜிமெயில் பக்கத்தில், மேலே வலது மூலையில், பயனர் பெயர், "Setting" இடையில், பச்சை நிற குடுவை ஒன்று இருக்கும். அதுவே, "Labs" பக்கத்திற்குச் செல்லும் இணைப்பாகும்.)
மின்னஞ்சல், பெறுநர் இன்பாக்ஸிக்குச் சென்றுவிட்டால், அதை திரும்பப் பெற இயலாது.
2010.07.03
நெருப்புநரி உலாவியில் தேவையில்லா தளங்களைத் திறக்காமல் தடுத்திட!
நெருப்புநரி உலாவியில் தேவையில்லா தளங்களைத் திறக்காமல் எப்படித் தடுப்பது என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம். இண்டர்நெட் எக்ஸ்பளோரரில் எப்படி ஒரு குறிப்பிட்ட தளத்தைத் தடுப்பது பற்றி அறிய இங்கு செல்லவும்.
ஃபயர்பாக்ஸில் இதற்காகவே ஒரு நீட்சி உள்ளது. “FoxFilter" என்ற நீட்சி தேவையில்லா தளங்களைத் தடுத்திடும். கீழுள்ள முகவரியில் இருந்து, இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
ஃபயர்பாக்ஸில் இதற்காகவே ஒரு நீட்சி உள்ளது. “FoxFilter" என்ற நீட்சி தேவையில்லா தளங்களைத் தடுத்திடும். கீழுள்ள முகவரியில் இருந்து, இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/4351
இந்த நீட்சியை நிறுவிய பிறகு, Tool bar ல் இருந்து "FoxFilter Preferences". பக்கத்தைத் திறக்கவும். ஏனப்லெ Fஇல்டெரின்க் தேர்ந்து எடுக்கவும்.
Block Listஐ திறக்கவும். ”porn" என்ற குறிச்சொல்லுடைய தளங்களைத் தடுத்திட வேண்டுமானால், அந்த சொல்லை உள்ளிடவும். ஒரு குறிப்பிட்ட தளத்தைத் தடுத்திட, அந்த தளத்தின் முகவரியைக் கொடுக்கவும்.
இந்த அமைப்பை யாரும் மாற்றாமல் தடுத்திட, நீங்கள் கடவுச் சொல் கொடுத்துப் பாதுகாக்கலாம். ”Security"-ல் சென்று, கடவு சொல் கொடுக்கவும்.
தடுத்திட்ட தளங்களைப் பார்வையிட்டால், கீழுள்ள திரை திறக்கும்.
இண்டர்நெட் எக்ஸ்பளோரரில் குறிப்பிட்ட தளங்களைத் தடுப்பது எப்படி என்பதைப் பற்றிப் பார்ப்போம். ஃபயர்பாகஸில் தடுப்பது அடுத்த பதிப்பில் வெளியிடுகிறேன்.
வழிமுறை:www.aroospc.blogspot.com
1)இண்டர்நெட் எக்ஸ்பளோரரைத் திறக்கவும். மெனுபாரில் உள்ள ”Tools → Internet Options → Content.” என்பதைத் திறக்கவும். ”Content Advisor box”-ல், ”Enable” என்பதைச் சொடுக்கவும்.

2) ”Approved Sites tab” திறந்து, நீங்கள் தடுக்க நினைக்கும் இணைய தளத்தின் முகவரியை உள்ளிடவும். ORKUT.COM-ஐ தடுக்க நினைத்தால், *.ORKUT.COMஎன்று உள்ளீடு செய்யவும். (முகவரிக்கு முன் * என்று போட வேண்டும்.) பின், “Never" என்பதைச் சொடுக்கவும்.

3) ”General tab”-ஐ தேர்வு செய்து, ”Users can see websites that have no ratings” எனபதைத் தேர்வு செய்யவும்.

4) பின் புதிய கடவுச் சொல்லைத் தரவும். பின் “ok"-தேர்வு செய்யவும்.

இப்போது, ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும். சந்தேகம் இருப்பின், பின்னூட்டமிடவும்.
ஜிமெயிலில் கடவுச் சொல் மாற்ற கூகிள் பயனர் கணக்குப் பக்கத்திற்குச் செல்லவும்.
https://www.google.com/accounts/
"Personal Setting"--> "Setting"---> "Change Password"
யாகூவில் கடவுச் சொல் மாற்ற யாகூ மெயிலில் உள்நுழையவும். "My Account" என்பதைத் தேர்வு செய்து மாற்றிக் கொள்ளவும். ("Sign Out" அருகில் இருக்கும்)
குறிப்பு: குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு முறை உங்கள் கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளவும்.
இப்போது எல்லாம் MS Office 2007 தான் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக ஆபிஸ் 2003-ல் சேமித்திடும் கோப்புகள் யாவும் 2007-ல் திறக்கும். ஆனால், ஆபிஸ் 2007-ல் உருவாக்கிய கோப்புகளை ஆபிஸ் 2003-ல் திறந்திட முடியாது என்பது யாவரும் அறிந்ததே. ஏனெனில் ஆபிஸ் 2007-ல் சேமித்திடும் கோப்புகள் யாவும் .docx, . xlsx, .pptx என்று முடியும். இதை எப்படி படிப்பது என்று ஆபிஸ் 2003-க்குத் தெரியாது. ஆபிஸ் 2007-ல் உருவாக்கிய கோப்புகளை ஆபிஸ் 2003-ல் திறந்திட 2 வழிகள் உள்ளன. (ஆபிஸ் 2003 உபயோகிப்பவர்களுக்காக)
1) மைக்ரோ சாப்ட் "File Format Converter" என்ற patch ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை ஆபிஸ் 2003 இருக்கும் கணினியில் நிறுவினால், ஆபிஸ் 2007 கோப்புகள் அனைத்தும் அந்த கணினியிலும் திறக்கலாம்.
இதை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும். (27mb)
http://getitfreely.co.cc/content/open-ms-office-2007-files-ms-office-2003
2) இரண்டாவது வழி:
MS office 2007-ல் சேமித்திடும் போதே Save என்பதைத் தேர்வு செய்யாமல், Save As---> MS Office 97 - 2003 என்பதைத் தேர்வு செய்தால், ".doc" என்றே Save ஆகும். ஆகையால் MS Office 2003-ல் அதை திறக்கலாம்.

சில இணைய தளங்களைப் பார்வையிடும் போது நமக்குத் தெரியாமலேயே நமது கணினியில் வைரஸ் போன்ற சில தேவையற்ற மென்பொருட்களை நிறுவி விடுகின்றன. சில தளங்கள் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றன.இப்படிப்பட்ட இணைய தளங்களில் இருந்து நம்மையும் நமது கணினியையும் காப்பாற்றிக் கொள்ள "Web of Trust" உதவுகிறது. இது ஃபயர்பாக்ஸின் நீட்சியாகும்(add-on). இந்த நீட்சியை தரவிறக்கம் செய்யஇங்கு செல்லவும்.
"Web of Trust" எல்லா இணைய தளங்களையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளது. இந்த நீட்சி, முகவரிப் பெட்டியின் அருகில் ஒரு பாதுகாப்பு வளையத்தைச் சேர்க்கும். அது பச்சை நிறத்தில் இருந்தால், அது பாதுகாப்பான தளம். சிவப்பு நிறத்தில் இருந்தால், பாதுகாப்பற்ற தளமாகும்.மஞ்சள் நிறத்தில் இருந்தால், கொஞ்சம் கவனம் தேவை.
இதன் சிறப்பு என்னவென்றால், கூகிள், யாகூ போன்ற தேடு பொறிகளில் தேடிடும் போதே, முடிவுகளில் வரும் இணையதளங்களின் பாதுகாப்பு அளவை காட்டி விடுவதால், அந்த தளங்களுக்குச் செல்லாமலே நமது கணினியைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
ஃபயர்பாக்ஸ் பயனர்கள் மட்டுமே இதை உபயோகிக்க முடியும். ஐ.இ உபயோகித்தால், கணினிக்கு ஆபத்து அதிகம்.
Internet Explorer உபயோகித்தால் கணினிக்கு ஆபத்தா?
ஆம், என்கிறது கூகிள். கூகிள் சமீபமாக எடுத்த கணக்கெடுப்பின் படி, 52.4 சதவீத இண்டர்நெட் எக்ஸ்பளோரர் உபயோகிப்பாளர்கள் ஆன்லைன் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்கிறது. ஏனெனில், இன்டர்நெட் எக்ஸ்பளோரர், ஃபயர்ஃபாக்ஸை போல அடிக்கடி அப்டேட் ஆவது இல்லை. ஆகையால், தினம் தினம் புதிதாய் உருவாகிடும் வைரஸ் / செக்குரிட்டி ஹோல்களிடமிருந்து, இந்த இன்டர்நெட் எக்ஸ்பளோரரால் அதனையும் கணினியையும் பாதுகாத்து கொள்ள முடிவதில்லை. மேலும் பல வைரஸ்/ட்ரோஜன் புரோகிராம்கள் இன்டர்நெட் எக்ஸ்பளோரரில் மட்டுமே செயல்படும் என்பது கூடுதல் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி. கீழே உள்ள படத்தைப் பாருங்கள், உங்களுக்கே புரியும்.

ஆதாரம் & மூலம்: கூகிள் வலைப்பூ.
இணைய உலாவியில், ஃபயர்ஃபாக்ஸ் முதலிடத்தையும், இண்டர்நெட் எக்ஸ்பளோரர் கடைசி இடத்தையும் பிடித்திருப்பதைப் படத்தில் பார்க்கலாம். ஆகையால், கூகிள் ஃபயர்ஃபாக்ஸைத் தத்தெடுத்து பரப்பி வருகிறது.
ஃபயர்ஃபாக்ஸை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்.
ஃபயர்ஃபாக்ஸின் நன்மைகள்:
1) Tabbed Browsing

பத்து இணைய தளம் திறக்கும் போது, தனித்தனி திரையாக திறக்காமல், ஒரே திறையில் பல Tab-களில் திறக்கலாம்.
2) Popup Blocking - சில இணையதளங்கள் திறந்திடும் போது அதனுடன் ஒன்றிரண்டு பாப் அப் திறை தேவையில்லாமல் திறந்து தொல்லை கொடுக்கும். ஃபயர்ஃபாக்ஸ் பாப் அப் திறைகளை தனிச்சையாக தடுத்திடும்.
3) மாதம் ஒரு முறை அப்டேட் ஆகிவிடும்.
4) Easy History cleaner - ப்ரொவ்ஸிங் ஹிஸ்டரியை அழிக்க தனி மென்பொருள் தேவை இல்லை. ஃபயர்ஃபாக்ஸ் மூடிடும் போது அனைத்து ஹிஸ்டரி, குக்கீ அழியும் படி செட்டிங்கை மாற்றி கொள்ளலாம்.
5) Integrated Search Engine - கூகிள், யாகூ, லைவ், ஆகிய தேடு பொறிகள் ஃபயர்ஃபாக்ஸிலேயே இருக்கும்.
6) Download Manager - கோப்புகள் தரவிறக்கம் ஆகி கொண்டிருக்கும் போது, இணையத் தொடர்பு துண்டித்துப் போனால் கூட இணைப்பு வந்தவுடன் தொடர்ந்து தரவிறக்கம் செய்யும்.
7) Add-On - இத்தனைக்கும் மேலாக, ஃபயர்ஃபாக்ஸை உங்களுக்கு ஏற்றாற் போல அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, இந்த பக்கதில் இருக்கும் ஆட்-ஆனை நிறுவினால், உங்கள் ஃபயர்ஃபாக்ஸ் முழுவதும் தமிழில் மாறிவிடும்.
இன்னும் பல நன்மைகள் உள்ளன. ஒருமுறை உங்கள் கணினியில் நிறுவி பாருங்கள், உங்களுக்கே தெரியும் பல வித்தியாசங்கள்.
2) Popup Blocking - சில இணையதளங்கள் திறந்திடும் போது அதனுடன் ஒன்றிரண்டு பாப் அப் திறை தேவையில்லாமல் திறந்து தொல்லை கொடுக்கும். ஃபயர்ஃபாக்ஸ் பாப் அப் திறைகளை தனிச்சையாக தடுத்திடும்.
3) மாதம் ஒரு முறை அப்டேட் ஆகிவிடும்.
4) Easy History cleaner - ப்ரொவ்ஸிங் ஹிஸ்டரியை அழிக்க தனி மென்பொருள் தேவை இல்லை. ஃபயர்ஃபாக்ஸ் மூடிடும் போது அனைத்து ஹிஸ்டரி, குக்கீ அழியும் படி செட்டிங்கை மாற்றி கொள்ளலாம்.
5) Integrated Search Engine - கூகிள், யாகூ, லைவ், ஆகிய தேடு பொறிகள் ஃபயர்ஃபாக்ஸிலேயே இருக்கும்.
6) Download Manager - கோப்புகள் தரவிறக்கம் ஆகி கொண்டிருக்கும் போது, இணையத் தொடர்பு துண்டித்துப் போனால் கூட இணைப்பு வந்தவுடன் தொடர்ந்து தரவிறக்கம் செய்யும்.
7) Add-On - இத்தனைக்கும் மேலாக, ஃபயர்ஃபாக்ஸை உங்களுக்கு ஏற்றாற் போல அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, இந்த பக்கதில் இருக்கும் ஆட்-ஆனை நிறுவினால், உங்கள் ஃபயர்ஃபாக்ஸ் முழுவதும் தமிழில் மாறிவிடும்.
இன்னும் பல நன்மைகள் உள்ளன. ஒருமுறை உங்கள் கணினியில் நிறுவி பாருங்கள், உங்களுக்கே தெரியும் பல வித்தியாசங்கள்.
No comments:
Post a Comment